TM completed segments: 0

Other segments: 36

TM completed words: 0

Other words: 749

TM Completed sentences

Original Translated

Other sentences

Original Similar TM records
அட்டிலா
அட்டிலா என்பவர் ஊணர்களின் ஆட்சியாளராக 434 முதல் 453 வரை திகழ்ந்தவர் ஆவார்.
இவர் பொதுவாக ஊணன் அட்டிலா என்று அழைக்கப்படுகிறார். நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஊணர்கள், ஆசுத்திரகோத்துகள், ஆலன்கள், பல்கர்கள், மற்றும் பிறரை உள்ளடக்கிய ஒரு பழங்குடியினப் பேரரசின் தலைவனாகத் திகழ்ந்தார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உலக வரலாற்றின் மிக சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவரது ஆட்சியின் போது, மேற்கு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசுகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய எதிரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
இவர் தன்யூபு ஆற்றை இரு முறை கடந்தார். பால்கன் குடாவைச் சூறையாடினார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE
ஆனால் கான்ஸ்டண்டினோபிலை இவரால் கைப்பற்ற இயலவில்லை.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இவரது பாரசீகப் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
441ஆம் ஆண்டில் கிழக்கு உரோமைப் (பைசாந்தியப்) பேரரசு மீது படையெடுத்தார்.
அதில் வெற்றி கண்டார்.
இவ்வெற்றியால் மேற்கு உரோமைப் பேரரசின் மீது படையெடுக்கும் துணிவைப் பெற்றார். [3] அக்காலத்தில் உரோமானியக் கௌல் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரான்சையும் வெல்ல முயன்றார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE#cite_note-Peterson-3
451இல் ரைன் ஆற்றைக் கடந்தார்.
அரேலியானம் (ஆர்லியன்சு) வரை அணி வகுத்துச் சென்றார்.
ஆனால் கட்டலவுனியச் சமவெளி யுத்தத்தில் நிறுத்தப்பட்டார்.
இறுதியாக இத்தாலி மீது படையெடுத்தார்.
வடக்கு மாகாணங்களை முற்றிலுமாக அழித்தார்.
ஆனால் இவரால் உரோமைக் கைப்பற்ற இயலவில்லை. உரோமானியர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்புகளுக்குத் திட்டமிட்டார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
ஆனால் 453ஆம் ஆண்டு இறந்தார்.
அட்டிலாவின் இறப்பிற்குப் பிறகு, இவரது நெருங்கிய ஆலோசகரான கெபிதா இனத்தைச் சேர்ந்த அர்தரிக்கு ஊண ஆட்சிக்கு எதிராக ஒரு செருமானியக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இதற்குப் பிறகு, ஊணப் பேரரசு சீக்கிரமே வீழ்ச்சியுற்றது.
ஆனால் செருமானிய மரபுவழி வீரக் கதைகளில் ஒரு கதாபாத்திரமாக அட்டிலா தொடர்ந்து வாழ்ந்தார். [4] [5]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE#cite_note-4
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE#cite_note-5